
(றிஸ்வான் சாலிஹூ)
மலையக அரசியலுக்கு புது இரத்தம் பாய்ச்சிய என் தந்தையின் மறைவுக்குப் பின் அரசியல் களம் மாத்திரமல்ல அவர் ஆரம்பித்த கட்சியின் செயற்பாடுகளும் மௌனித்துள்ளதை மறக்க முடியாது என்று முன்னாள் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இதனை பார்வையாளராக இருந்து விமர்சிப்பதோடு என் கடமையை மட்டுப்படுத்திக் கொள்ள மாட்டேன் என் தந்தை வழியில் எனக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய 17 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை அடுத்தகட்ட சமூக செயல்பாடுகளுக்கான அடித்தளமாக அமைத்துக்கொண்டு மக்களுடன் இணைந்து பயணிப்பேன்.
இதற்காகவே "அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி" என்ற தொழில் சங்கத்தையும் "சந்திரசேகரன் மக்கள் முன்னணி" என்ற அரசியல் கட்சியையும் பதிவு செய்து என் பணியை ஆரம்பிக்க உள்ளேன்.
ஆரோக்கியமான முற்போக்கான தூய நோக்குடைய அனைத்து சக்திகளின் ஆதரவுடன் நிச்சயமாக புதிய அரசியல் தொழிற்சங்க கலாசாரத்தை உருவாக்கும் மக்கள் சக்தியுடனான வெற்றியை என் தந்தைக்கு சமர்ப்பிப்பேன் என்பதோடு மாற்றத்திற்காக ஒன்றிணைவோம் என்றும் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
November 29, 2020
Rating: