
(இர்பான் றிஸ்வான்)
அனுராதபுரம் மாவட்டத்தின் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக 25000 ஏக்கர் சோளப்பயிர்ச்செய்கை கைவிடப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அனுராதபுர தானக்குவெவ பகுதியில் செய்கை பண்ணப்பட்டுள்ள சோளச் செய்கைகளில் படைப்புளுக்களின் தாக்கம் காரணமாக 25000 ஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை கைவிடப்பட்டுள்ளதாக சோளச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பல சிரமங்களுக்கு மத்தியில் செலவு செய்து செய்கை பண்ணப்பட்ட சோளப பயிர்ச் செய்கையின் அறுவடைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் தருணத்தில் படைப்புளுக்கள் சோளக் கதிர்களுக்குள் ஊடுருவியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு வகையான கிருமிநாசினிகள் விசிறியும் இந்த படைப்புளுக்களை கட்டுப்படுத்த முடியாதுள்ளதாகவும்,
இவற்றினால் தாம் பல்வேறு வகையான இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் இவற்றினை உரிய அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நஷ்ட ஈட்டினை பெற்றுத்தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
