(றிஸ்வான் சாலிஹூ)
தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனையாக பொலன்னருவை பொது மருத்துவமனைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள சீனா-இலங்கை நட்புறவு தேசிய நெப்ராலஜி சிறப்பு மருத்துவமனை விரைவில் வைபவ ரீதியாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடு முழுவதும் பல மாவட்டங்களில் உள்ள மக்களின் நீண்டகால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிர்மாணிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன அவர்களால் 2018ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் 204 படுக்கைகள், 100 இரத்தமாற்று இயந்திரங்கள், அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தியேட்டர் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலைக்கு விரைவில் திறப்புவிழா
Reviewed by Editor
on
December 04, 2020
Rating:
