கடந்த 19 நாட்களாக எமது மாநகரம் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் நிலையில் இருப்பதாலும் , தொற்றின் தாக்கம் குறைந்திருந்தாலும் ,
தொடர்ந்தும் புதிய தொற்றாளர்கள் ,
சில பிரதேசங்களில் கண்டறியப்படுவதால் ,
எமது பிரதேசத்தின் நன்மை கருதியும் , மக்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டும் ,
நேற்று அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாகவும் ,
இன்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாகவும் ,
பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை ,
மாநகர மக்களுக்கு அறியத்தருகின்றோம் !
தீர்மானங்கள் :
அக்கரைப்பற்று 14 (காதிரியா வடக்கு)
நகர் பிரிவு - 3
அக்கரைப்பற்று - 5
இவற்றுடன் சுகாதார அமைச்சின் அறிவித்தலுக்கு மேலதிகமாக , தொற்றின்
நிலைமையையும் , மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு ,
அக்கரைப்பற்று பிரதான சந்தை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் முழுமையாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக தொடரும் !
ஏனைய பிரதேசங்களில் இருப்பவர்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ,
அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு ,
தங்களுடைய பணிகளில்
மாலை 6 மணி வரை மட்டும் ஈடுபடலாம் !
அத்தியவசிய தேவைகளுக்காக விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள மரக்கறி கடைகள் , மற்றும் அத்தியசிய நுகர்வோர் சில்லறைக் கடைகள் மட்டுபடுத்தப்பட்டளவில் மாலை 6 மணிவரை திறக்கலாம் !
பாமசிகள் தவிர்ந்த ,
ஏனைய அனைத்து விற்பனை நிலையங்களும் , மறு அறிவித்தல் வரும் வரை மூடியே இருக்கும் !
ஹோட்டல்கள் பொதுமக்களுக்கு முழுமையாக மூடப்பட்டு , உணவுகளை கொண்டு செல்ல மட்டும் வழங்குவதற்கு நிபந்தனை களுடன் அனுமதிக்கப்படும் !
கூட்டம் கூடுதல் , நிகழ்வுகளை நடாத்துதல் என்பன முற்றாக தடைசெய்யப்படும் !
பள்ளிவாசல்களை திறப்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் !
அக்கரைப்பற்று பொலிஸ் எல்லையை கடந்து முறையான அனுமதி இல்லாமல் பிரயாணம் செய்ய தொடர்ந்தும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது !
அத்துடன் விவசாயிகள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் ,
என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதை அறியத்தருகின்றோம் !
எனவே மாநகர மக்கள் தொடர்சியாக சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றி
எமது மூத்த பிரஜைகள் , நோயாளிகள் , குழந்தைகள் மீது அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டுகிறோம் !
இத்தனை நாட்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு மத்தியில் ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்தும் உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்கின்றோம் !
சுகாதார வைத்திய அதிகாரி மற்றும்
முதல்வர்
மாநகர சபை
அக்கரைப்பற்று .
