இலங்கையில் ஜனாஸா எரிப்பதனை ஜனாதிபதி ஊடாக ஒரு முடிவுக்கு கொண்டுவருமாறு மகாநாயக்கர்களிடம் வேண்டுதல்



(அஸ்ரப் ஏ சமத்)

இலங்கையின் மகா புர நிக்காயவின் அகில இலங்கையின் பதவி வகிக்கும் கொட்டுக் கொட தம்மவாசய மகா நாயக்கவை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர்   மாக்கார் இன்று (24) கல்கிசையில் உள்ள விகாரயில் வைத்து சந்தித்தார்.

இச் சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வஜிர ஜயகொடவும் கலந்து கொண்டார்     இச்சந்திப்பில் மகாநாயக்க தேரரிடம் முஸ்லிம்களது ஜனாசா இலங்கையில் எரிப்பதனை மகாநாயக்கர்கள் இணைந்து நிறுத்தி அதனை ஜனாதிபதி ஊடாக ஒரு முடிவுக்கு கொண்டுவருமாறும்  முஸ்லிம்கள் மரணிக்கும் ஜனஸாக்களை புதைப்பதற்கு  மகாநயாக்கள் கூடி ஒரு தீர்மாணத்தினை எடுக்கும் படியும் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிருத்தலின்படி 130 நாடுகளும் கொவிட் 19 மரணிக்கும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை உரிய சுகாதார பேனுதலின் படி புதைப்பதாகவும் இலங்கையில் மட்டும் அதனைக் கடைப்பிடிக்காது பலவந்தமாக எரிப்பதாகவும் இதனால் இந்த நாட்டில் வாழும் மக்கள் மட்டுமல்ல ஏனைய நாடுகளும் வித்தியாசமான கோணத்தில் இலங்கையை உற்று நோக்குகின்றது. இந்த நாட்டில் உள்ள 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மத்திய கிழக்கு நாடுகள் வெளிநாடுகளில் வாழ்ந்துவருகின்றனர்.

நாம் இலங்கை ஒரு ஜக்கியமாக சகல சமுகங்களது மதம் கலாச்சாரங்களை மதித்து நடத்தல் வேண்டும். இதனை மகாநாயக்கர்கள் இணைந்தே இதனை இந்த நாட்டின் ஆட்சியில் உள்ள அரச மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு தெரவித்தல் வேண்டும் என இம்தியாஸ் வேண்டிக் கொண்டார்.

இவ்விடயம் சம்பந்தமாக நிக்காய கொட்டுக் கொட தம்மவாசஸ மகாநாயக்க தேரர் தெரிவிக்கையில்,

எமது நிக்காயவின்  அடுத்த   கூட்டத்திலும் ஜனாதிபதி சந்திப்பிலும் இவ் விடயம் சம்பந்தமாக கலந்து ஆலோசிப்பதாக   தெரவித்தார். அவர் தற்போதைய நிலையில் சுகவீனமற்று இருப்பதாகவும் அவரது செயலாளர் தெரவித்தார்.


இலங்கையில் ஜனாஸா எரிப்பதனை ஜனாதிபதி ஊடாக ஒரு முடிவுக்கு கொண்டுவருமாறு மகாநாயக்கர்களிடம் வேண்டுதல் இலங்கையில் ஜனாஸா எரிப்பதனை ஜனாதிபதி ஊடாக ஒரு முடிவுக்கு கொண்டுவருமாறு மகாநாயக்கர்களிடம் வேண்டுதல் Reviewed by Editor on December 24, 2020 Rating: 5