
(எஸ்.அஷ்ரப்கான்)
கொரோனா தொற்றினால் இறக்கும் முஸ்லிம் ஜனாசாக்கள் எரிக்கப்படுவதை நிறுத்தக் கோரியும், நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் கவனயீர்ப்பு அமைதி எதிர்ப்பு இன்று (20) நடைபெற்றது.
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை தொகுதி முன்னாள் அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான பெஸ்டர் ஏ.எம்.றியாஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் அரசியல் செயற்பாட்டாளர் வபா பாறூக் மற்றும் கல்முனை பிரதேச வர்த்தகர்கள் இளைஞர்கள், புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் றியாஸ்,
இன்று இந்த நாட்டிலே கொரோனா வைரஸினால் ஏற்படும் மரணத்தினால் எமது முஸ்லிம் ஜனாஸாக்களையும் பலாத்காரமாக எரித்து இந்த அரசாங்கத்தின் மீது இத்தனை காலமாக தனிப்பட்ட முறையில் நான் வைத்திருந்த நம்பிக்கையை நான் முற்றாக இழந்து விட்டேன். இனிமேலாவது இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் மீது இழைக்கின்ற பிழையான நடைமுறைகளை நிறுத்தி ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு, எமது கல்முனைப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் சகோதரர்கள் பெண்கள் எல்லோரும் இந்த அநியாய எரிப்புக்கு எதிராக இந்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் அதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

இங்கு அரசியல் செயற்பாட்டாளர் வபா பாறூக் அவர்களும் தனது கருத்தினை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
December 20, 2020
Rating:
