(றிஸ்வான் சாலிஹூ)
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் கொடுரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது-
அக்கரைப்பற்று பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்றிரவு(09) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 35 வயதான தாஹீர் தஸ்பீக் என்ற கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உறவினர் ஒருவரின் காணி எல்லைப்பிரச்சினை தொடர்பில் அதனை சமாதானம் செய்ய சென்ற வேளை, இச்சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையிலயே குறித்த நபரின் உறவினர் ஒருவராலயே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
