(றிஸ்வான் சாலிஹூ)
Iconic Youths அமைப்பானது அக்கரைப்பற்று மாநகரசபையில் இயங்கும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து கடந்த அக்கரைப்பற்றில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் (நவம்பர்) 26ஆம் திகதி தொடக்கம் இன்றுவரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டதனால் இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.
நான்கு கட்டங்களாக இந்த உலர் உணவு பொதிகள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் தனவந்தர்களின் பூரண அனுசரணையுடன் இது வழங்கப்பட்டு வருகிறது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று, பெய்து வரும் மழை, தொழிலின்மை இந்த காரணத்தால் அதிகமான குடும்பங்கள் சொல்லொன்னா துயரில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களுக்கு முடியுமான வரை களப்பணியில் இறங்கி முழு மூச்சாக அன்றாடம் காலை முதல் இரவு வரை பசி, துக்கம், வேலை, குடும்பம் என அனைத்தையுமே தியாகம் செய்து எமது மக்களின் துயர் துடைக்க iconic youths அமைப்பின் வாலிபர்கள் அரும்பணி ஆற்றுவதை பாராட்ட வேண்டும்.
இவ்வுயர்ந்த நற்பணிக்கு பண ரீதியாக உதவி செய்த சகோதரர்களுக்கும், இந்த செயற்திட்டத்திற்கு தேவையான ஏனைய உதவிகளை செய்து தரும் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் மற்றும் மாநகரசபை ஊழியர்கள் அனைவருக்கும் Iconic Youths அமைப்பின் சார்பில் அதன் தலைவர் யூ.எல்.முஹம்மட் தில்ஷான் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த நல்ல பணிக்கு உதவி செய்ய விரும்புகின்றவர்கள் கீழ் குறிப்பிடுவோரை தொடர்பு கொள்ளுமாறும் அமைப்பின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர்-
முஹம்மட்
+94 76 93 41 207
பொருளாளர்
அஸ்கர்
+94 77 47 38 348
