இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலங்கைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
300,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகமாக இந்தியாவிடம் இருந்து குறித்த 6 இலட்சம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து கொவிட் தடுப்பூசிகளை வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
ஒக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இலங்கை அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி
Reviewed by Sifnas Hamy
on
January 24, 2021
Rating:
