இலங்கையில் பயன்படுத்துவதற்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பி.சி.ஆர் பரிசோதனை கருவிகளை நன்கொடையாக வழங்கியமை மற்றும் இலங்கையின் கொவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த தென்கொரிய தூதரகம் அறிவித்துள்ள ‘வலுவாக இருங்கள்’ எனும் பிரச்சாரத்துக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தென்கொரிய அரசுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
ஒரு சர்வதேச நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் வலுவான பொறிமுறையாகும் என்பதை இரு நாடுகளுக்குமிடையிலான இந்த பரஸ்பர ஒத்துழைப்பு நினைவூட்டுவதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை - கொரிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை ஸ்தாபிக்கும் நிகழ்வு நேற்று (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொரிய தூதுவர் வூஜின் ஜியோங் (Mr. Woonjin JEONG) மற்றும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பி.சி.ஆர் பரிசோதனை கருவிகளை வழங்கிய தென்கொரியவுக்கு நன்றி - சபாநாயகர்
Reviewed by Editor
on
January 08, 2021
Rating:
