மாற்று திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பாதை திறந்து வைப்பு


(சர்ஜுன் லாபீர்)

முன்னேறும் நாட்டை கட்டியெழுப்ப "சுபீட்சத்தின் நோக்கு" எனும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க புதிய ஆண்டில் கல்முனை பிரதேச செயலகத்தின் முதலாவது வேலைத்திட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வளைவு பாதை(Wheelchair ramp) திறப்பு விழா இன்று(01) கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்திறப்பு விழாவில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.ரிஸ்னி, கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா, பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.ஏ சாலீஹ், அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மாற்று திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பாதை திறந்து வைப்பு மாற்று திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பாதை திறந்து வைப்பு Reviewed by Editor on January 01, 2021 Rating: 5