நேர்மைக்கு மகுடம் விருதினை பெற்ற பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (27) புதன்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.
புதிய தலைமுறையினருக்காக சிறந்த அரச சேவையாளர்களாக மிளிர்வதற்கும் , நேர்மையான அரச அலுவலர்களை அடையாளம் காண்பதற்கும் சமூகத்தில் முன்மாதிரியான அலுவலர்களுக்கு மகுடம் விருது வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் நேர்மையான அரச அலுவலர்களை கௌரவித்து பாராட்டி நேர்மைக்கு மகுடம் விருதுகளை வழங்கி வருகின்றது
அந்தவகையில் 2020 ஆண்டு தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட அரச அலுவலர்களுக்கான தெரிவு போட்டியில் முதல் 10 இடங்களுக்கான தெரிவு போட்டியில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் தெரிவு செய்யப்பட்டு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் நேர்மையான அரச அலுவலர்க்கான நேர்மைக்கு மகுடம் விருது வழங்கி கௌரவித்து பாராட்டி கௌரவித்துள்ளது
இந்நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
