தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக சமீரா பஜிலி நியமனம்!


அமெரிக்காவில் அமையவிருக்கும் அதிபர் ஜோ பைடன் அரசாங்கத்தில் இந்தியாவின் காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமிய சகோதரி சமீரா ஃபஜிலி அவர்கள் அமெரிக்காவின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக (Duputy Director of National Economic Council) இன்று (22) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் போது அமெரிக்காவின் உள்நாட்டு நிதி மற்றும் சர்வதேச விவகார அலுவலகங்களில் தேசிய பொருளாதார கவுன்சில் மற்றும் கருவூலத் துறையில் மூத்த ஆலோசகராக பணியாற்றினார்.

அமெரிக்க பொருளாதார ஆலோசகரான முக்கியமான இந்த பதவியை முஸ்லிம் பெண்ணுக்கு  கொடுத்தது அமெரிக்க வரலாற்றில் ஆச்சரியமான விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக சமீரா பஜிலி நியமனம்! தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக சமீரா பஜிலி நியமனம்! Reviewed by Editor on January 22, 2021 Rating: 5