(எஸ்.எம்.அறூஸ்)
பொத்துவில் ஒஸ்மானியா கனிஸ்ட வித்தியாலயத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும் கூடிய விரைவில் நிவர்த்தி செய்து கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸர்ரப் உறுதியளித்துள்ளார்.
ஒஸ்மானியா கனிஸ்ட வித்தியாலயத்திற்கு நேற்று மாலை திடிர் விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப், பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.அபுல் ஹஸன் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் கு உறுப்பினர்களிடம் பாடசாலையில் காணப்படும் குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்டார்.
அத்தோடு ஒஸ்மானியா கனிஸ்ட வித்தியாலயத்தின் மிகவும் பழைமை வாய்ந்த கட்டிடத்தையும் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் அவர்கள் சகல வசதிகளுடனும் மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டினைப் பெற்றுத்தருவதாகவும் பாடசாலை அதிபரிடம் வாக்குறுதியளித்தார்.
மேலும், இங்கு காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக மாகாணக் கல்விப்பணிப்பாளருடன் கலந்துரையாடிஅதற்கான தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும், ஏனைய தேவைப்பாடுகளுக்காக வரவு -செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிதியினை ஒதுக்கீடு செய்து தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் இங்கு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரபினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு மில்லியன் மரங்களை நடும் வேலைத்திட்டதின் கீழ் பாடசாலை வளவில் மரங்கன்றுகளும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாராளுமன்ற உறுப்பினருடன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம்.எம்.தாஜூதீன், சித்தி ஜூனைதா, எஸ்.பகுர்தீன் உட்பட பிரதேச முக்கியஸ்தர்களும் விஜயம் செய்திருந்தனர்.
