உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம்...


இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ஏப்ரல் மாதத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை பெறுபேறுகளுக்கமைய செப்டம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் உயர்தர பரீட்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

எதிர்வரும் மார்ச் மாதம் சாதாரண தர பரீட்சையை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பெறுபேறுகளை எதிர்வரும் ஜுன் மாதமளவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம்... உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம்... Reviewed by Editor on January 18, 2021 Rating: 5