15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அத்துருகிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் பாதிக்கப்பட்ட மாணவியின் ஆபாச காணொளியை வைத்து இரண்டு வருடங்களாக தன்னுடன் உறவுகொள்ளுமாறு துன்புறுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளைில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைகளுக்காக களுபோவில பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
-ஹசீம் சஜீத்-
பாடசாலை மாணவியை இரண்டு வருடங்கள் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது.
Reviewed by Sifnas Hamy
on
January 21, 2021
Rating:
