(றிஸ்வான் சாலிஹூ)
Iconic Youths அமைப்பின் "கல்விக்கு கரம் கொடுப்போம்" செயற்திட்டத்தின் 2021 ஆம் கல்வியாண்டிற்கான கற்கை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (15) மாலை சகோ. யாகூப் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் சமூக ஆர்வலர் யூ.எல்.தில்ஷான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் தலைமை உரையாற்றிய அமைப்பின் தலைவர் தில்ஷான் தனது தலைமையுரையில்,
இக்கற்கை உபகரணங்கள் கல்வியில் ஆர்வம் கொண்ட வறுமையான மாணவர்களை தெரிவு செய்து வழங்கியுள்ளதாகவும், மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் சிறந்த நற்பிரஜையாக உருவாக வேண்டும் என்றும், இது போல் தாங்களும் எதிர்வரும் காலங்களில் ஏனைய சகோதரர்களுக்கும் உதவ வேண்டும் என்றும் கூறினார்.
இச் செயற்திட்டத்திற்கு எல்லா வழிகளிலும் பண ரீதியாக உதவி செய்த தனவந்தர்களுக்கும், அதே போன்று இரவு பகல் பாராது அயராது உழைத்த கழக உறுப்பினர்களுக்கும் அமைப்பு சார்பான கோடான நன்றிகளை தெரிவிப்பதோடு எல்லாம் வல்ல இறைவன் எல்லோருடைய நல்லெண்ணங்களையும் பொருந்திக் கொள்ள பிரார்த்திப்போமாக என்று தனது தலைமையுரையில் அவர் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட 25 மாணவ மாணவிகளுக்கு எதிர்வரும் கல்வியாண்டிற்கு (2021) கற்றலுக்கு தேவையான சகல விதமான கற்கை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
