முதலில் -
இப்பரீட்சை நம் வாழ்வைத் தீர்மானிக்கப் போவதில்லை மாறாக அடுத்த படிக்கான இடைத் தரிப்பு இதனை சிறப்பாக முன்னெடுக்கும் போது அடுத்துள்ள படிக்கான தெரிவுக்குரிய பரப்பு விசாலமாய் அமையும்.
தயார்படுத்தலுக்கான அனைத்து விடயங்களும் சாதனங்களும் எம்மிடம் உள்ளது என்றவாறாக என் மனதை தயார்படுத்திக்கொண்டு, நம்மிடம் உள்ள பாடங்களை மூன்று விதமாகப் பிரித்துக் கொள்வோம்.
எம்மிடம் உள்ள காலம் குறுகியது. ஆகையால் ஒவ்வொரு பாடத்திற்கும் கடந்த இரு வருட past paper ஐயும் விடைகளுடன் கூடிய முறையான Model Paper எடுத்துக் கொள்வோம்.
அந்தப் பேப்பர்களை சற்று ஆழமாக நோக்குவதன் மூலம் வினாக்களின் போக்கை விளங்கிக் கொண்டு
#முதல் வகையான theory மட்டுமான பாடங்களை தயார்படுத்தும் போது தங்களிடம் உள்ள அனைத்து பாடம் தொடர்பிலான syllabus உள்ளான நோட்ஸ் மற்றும் புத்தகங்களை வாசித்து முடித்தல் வேண்டும்.
#இரண்டாவது வகையானதையும் மேலுள்ள theory உடன் தொடர்புடைய விடயப் பரப்பை மேலுள்ளவாறு தயார் படுத்திக்கொண்டு அப்ளிகேஷனை செய்து பார்ப்பதுடன் பிறிதொரு கொப்பியில் பக்க வாரியாக குறித்துக் கொள்ள முடியும்.
#மூன்றாவது வகையானதிற்கு கடந்த ஐந்து வருட past paper மற்றும் விடையுடன் கூடிய model paper என்பவற்றை செய்துபார்ப்பது தான் முக்கிய கவனம் அல்லது திருப்பி பார்க்க வேண்டியவற்றை பக்கவாரியாக குறித்துக் க்கொள்ள முடியும்.
இன்னும் ஒன்று செய்யலாம், ஆசிரியர்களை online வகுப்புகளின் போது பகிரப்பட்ட பேப்பர்களை நீங்கள் செய்யும்போது correct பண்ணி தரக்கூடிய ஆசிரியர் ஒருவர் தயாராயின் அதையும் செய்து பார்க்க முடியும்.
பின்னர் வாரத்தில் ஒருநாள் நீங்கள் குறித்து வைத்துள்ள doubt copy ஐ எடுத்து ஆசிரியர் ஒருவரை அல்லது தேர்ச்சி உள்ள friends circle இல் கலந்துரையாடி clear பண்ணி கொண்டு அதைத tick பண்ணிக் கொள்ள முடியும்.
பரீட்சைக்குரிய நாள் நெருங்க முன்னர் 9 பாடங்கள் என்பதால் உங்களிடம் உள்ள நேர அவகாசத்தை கொண்டு 18 நாள் அல்லது 9 நாளை கொண்டு நேரசூசி order படி இரண்டு அல்லது ஒரு நாளில் நீங்கள் மீளப் பார்க்க வேண்டியதாக குறிப்பிட்ட கொப்பியை கொண்டு ஞாபகப்படுத்தி கொண்டு அதனை tick பண்ணிக் கொள்ள முடியும்.
கூடவே past paper இனைப் புரட்டி விடைகளை கூறிப்பார்த்து எமது தயார் நிலையை உறுதி செய்ய முடியும்.
உங்களுடைய doubt copy ஐயும் notes பற்றிய குறிப்பு copy யையும் பார்க்கும்போது ஒரு தைரியம் ஏற்படும் துணிவாக பரீட்சைக்கு செல்ல முடியும்.
ஏற்கனவே தங்களுக்கான ஒரு way இல் prepare பண்ணுகிற மாணவர்கள் தங்கள் முயற்சியை தொடர முடியும் ஏனையோர் இதனை பின்பற்ற முடியும்.
