33வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் சகாதா ஆசிரியை...


(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று சம்சுல் உலும் வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றிய திருமதி N.S.A.மஜீட் (சகாதா ஆசிரியை) அவர்கள் தனது 33 வருட ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்று சென்றுள்ளார்.

ஓய்வு பெற்று செல்லும் ஆசிரியைக்கான பிரியாவிடை நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.சமீம் தலைமையில் பாடசாலையில் மிக எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறியது.

நிகழ்வில் அக்கரைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.கலீலூர்ரஹ்மான் அவர்களும், ஆசிரிய ஆலோசகர் ஏ.எல். பாயிஸ் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.



அத்தோடு இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த அடைவை அடைவதற்கு காரணமாக இருந்த பாடசாலையின் ஆசிரியர் எம்.எம்.றிஸ்வின் அவர்களும் நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
33வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் சகாதா ஆசிரியை... 33வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் சகாதா ஆசிரியை... Reviewed by Editor on February 19, 2021 Rating: 5