பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று (24)கொழும்பில் பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
ஊழல், நீதியான ஆட்சி, வறுமை ஒழிப்பு ஆகியனவற்றுக்கு பாகிஸ்தான் பிரதமராகிய நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பது போலவே, ஐக்கிய மக்கள் சக்தியும் அதற்கு முக்கியத்துவம் வழங்குகிறது. குறுகிய காலத்தில் நாம் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறுகிற போதிலும், இது மிகுந்த பயனை தரும் என நம்புகிறேன் என சஜித் பிரேமதாசா இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களின் உடல்கள் பாரபட்சமின்றி நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென்பதே தமதும், தமது கட்சியினதும் எதிர்பார்ப்பு எனவும் இதன்போது சஜித் பிரேமதாசா பதில் வழங்கியுள்ளார்.
இவற்றையெல்லாம் செவி மடுத்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர், சஜித்துடனான தமது சந்திப்பு குறித்து மகிழ்வடைவதாகவும், எதிர்காலத்தில் மேலும் இணைந்து செயற்பட தாம் ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் மற்றும் கபீர் காசீம் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர்.
Reviewed by Editor
on
February 24, 2021
Rating:
