ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கமைய கொவிட் - 19 வைரஸிற்காக வழங்கப்படும் Oxford- AstraZeneca தடுப்பூசி பொது மக்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் இன்று (15) தொடக்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த தடுப்பூசி வழங்கும் முதற்கட்ட பணி மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படுவதுடன், முதல் கட்டத்தில் மேல் மாகாணத்தில் வாழும் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாக கூடுதலான வாய்ப்புள்ள அனர்த்த வலயத்திலுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
