66பேருக்கு ஆளுநர் நிதியத்திலிருந்து நிதியுதவி!!!

ஊவா மாகாண ஆளுநர் நிதியிலிருந்து 66 பேருக்கு ரூபா 680,000.00 நிதி உதவி வழங்கி வைக்கும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.முஸம்மில் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இன்று (02) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது 57 பேருக்கு மருத்துவ நிதி உதவியும், 06 பேருக்கு உயர்கல்வி நிதி உதவியும், 03 பேருக்கு வீடு நிர்மாண நிதி உதவியும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்தன உள்ளிட்ட ஆளுநர் நிதியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


66பேருக்கு ஆளுநர் நிதியத்திலிருந்து நிதியுதவி!!! 66பேருக்கு ஆளுநர் நிதியத்திலிருந்து நிதியுதவி!!! Reviewed by Editor on March 02, 2021 Rating: 5