
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவின் அக்கரைப்பற்று மேற்கு மற்றும் கிழக்கு சமுர்த்தி வங்கிகள் ஒன்லைன் (online) சேவையின் மூலம் தங்களது வாடிக்கையாளர்களின் கணக்கு மீதிகளை தரவேற்றும் செய்யும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளிமி) தலைமையில் இன்று (10) புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன் அவர்களினால் முதலாவது பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர் , வங்கி முகாமையாளர்கள் , வங்கி பணிக்குழுவினர் , பிரிவு உத்தியோகத்தர்கள், வங்கிகளுக்கு இணைப்பு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வை முன்னிட்டு "ஒன்லைன் வங்கி முறையில்" அர்ப்பணிப்பான சேவைக்காக செயலாற்றுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களையும் மாவட்டப் பணிப்பாளர் சார்பாக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் யூ.கே.நளீம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
Reviewed by Editor
on
March 10, 2021
Rating: