(றிஸ்வான் சாலிஹூ)
நீர் வழங்கல் அமைச்சின் பதுளை மாவட்ட வருடாந்த கூட்டம் அமைச்சின் செயலாளர் பியத் பந்து விக்ரம அவர்களின் பங்கேற்புடன் பதுளை மாவட்டச் செயலக கேப்போர்கூடத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக சுமார் நாற்பதாயிரம் மில்லயன் ரூபாய்கள் பதுளை மாவட்டத்திற்கு ஒதுக்கியுள்ளதாகவும், இந்நாட்டின் நீர் தேவையின் 90% சதவீதத்துக்கும் மேலானவை மத்திய மலைப்பகுதியை மையமாகக் கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக நீர்வளத்தைப் பாதுகாப்பது அரச அதிகாரிகளின் விசேட கடமையை எனவும், அபிவிருத்தி திட்டங்களைச் செயல்படுத்தும் போது மலையக நீர்வளங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அமைச்சின் செயலாளர் பியத் பந்து விக்ரம அவர்கள் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன டேனிபிடிய, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, அரவிந்த குமார், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.முஸம்மில்,அரசியல் பிரமுகர்கள், திணைக்களகங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
