(சர்ஜுன் லாபீர்)
கல்முனை பிரதேச செயலாளராக இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஜெ.லியாக்கத் அலி இன்று (01) திங்கட்கிழமை தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றுவதற்கான கடிதம் அரச சேவைகள் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ரி.எம்.கலீல், கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதுருதீன் பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாஸீன் பாவா உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
March 01, 2021
Rating:

