(றிஸ்வான் சாலிஹூ)
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில் கடமையாற்றி பதவியுயர்வு மற்றும் சேவையிலிருந்து ஓய்வு பெற்று செல்லும் மூவருக்கான சேவை நலன் பாராட்டு விழா இன்று (25) வியாழக்கிழமை சிரேஷ்ட சமூகவியலாளர் பி.இஷாக் தலைமையில் காரியாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நீர் வழங்கல் சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளராக கடமையாற்றிய மட்டக்களப்பைச் சேர்ந்த பிரதம பொறியியலாளர் டீ.ஏ.பிரகாஷ் அவர்கள் உதவி பொது முகாமையாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்வதும், மட்டக்களப்பு பிராந்திய களஞ்சியசாலையில் கடமையாற்றிய காத்தான்குடியைச் சேர்ந்த கே.எல்.எம்.இப்றாஹீம் மற்றும் மட்டக்களப்பு நீர் ஊந்து நிலையத்தில் கடமையாற்றிய சம்பூரைச் சேர்ந்த வி.யோகேந்திரா ஆகிய இருவரும் சேவையில் இருந்து ஓய்வு பெற்று செல்வதற்காக காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் இந்த சேவை நலன் பாராட்டு விழா எடுக்கப்பட்டது.


இந்நிகழ்வில் உதவி பொது முகாமையாளர் டீ.ஏ.பிரகாஷ், பொறியியலாளர்கள், கணக்காளர், வாணிப உத்தியோகத்தர், பொறியியல் உதவியாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின் கதாநாயகர்களுக்கு உத்தியோகத்தர்களினால், பொன்னாடை போர்த்தியும் நினைவுப் பரிசில்கள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
