நமது பிராந்தியத்தின் மூத்த ஊர் மூத்த பள்ளிவாசல் சம்மேளத்தின் தலைவர் , சாய்ந்தமருதுவின் வரலாற்று நாயகன் சாதனை வீரர்,அகிம்சாவாதி, உண்மையையும், சத்தியத்தையும் நிலைநாட்ட அறப்போர் புரிந்த உமர் முக்தார் , தான் சார்ந்த மக்களுக்காய் தள்ளாத வயதிலும் தளராமல் வழிகாட்டி அதில் வெற்றியும் கண்ட அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா சேரின் நல்லெண்ணங்கள் வெற்றி பெறவும் அவருடைய மறுமை வாழ்வு பிரகாசிக்கவும் அல்லாஹ் அவரை உயர்ந்த சுவர்கத்தில் நிலைக்கச்செய்யவும் நான் பிரார்த்திக்கின்றேன் என்று தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
அன்னாரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினர் , உறவினர்கள் , அவரின் நிருவாகத்திற்கு தோள் கொடுத்த ஏனைய நிருவாக உறுப்பினர்கள் , அவரை நேசிக்கும் சாய்ந்தமருது பிராந்திய மக்கள் அவரை நேசிக்கும் ஏனைய ஊர் மக்கள் எல்லோருக்கும் அவரின் இழப்பை ஏற்கும் மனவலிமையை வேண்டியும் பிரார்த்திக்கின்றேன் என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
