
மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்களின் திருவுருவ சிலைக்கு அவரின் 123 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று (31) புதன்கிழமை கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சகிதமாக மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டு மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டது.

அதன் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெற்றது. அச்சந்திப்பில் தந்தை செல்வாவினால் எம்மக்களுக்காக உருவாக்கப்பட்ட இக் கட்சியை இனிவரும் காலங்களில் நாம் ஒன்று சேர்ந்து மென்மேலும் எம் மக்கள் துணைகொண்டு பலப்படுத்துவோம் என்று இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
March 31, 2021
Rating: