காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஜே.பி அவர்களின் அழைப்பின் பேரில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.என்.எச்.எம்.சித்ரானந்த அவர்கள் கடந்த சனிக்கிழமை (27) காத்தான்குடி நகருக்கு வருகை தந்ததோடு காத்தான்குடி நகரசபை பொது நூலகம் சிறுவர் நூலகம் நகரசபை திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ நிலையம் போன்றவற்றை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் நகர முதல்வர், நகர சபை உறுப்பினர்கள், நகர சபை செயலாளர், கணக்காளர் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அமைச்சின் செயலாளருக்கு நகர முதல்வரால் நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டு அவர் கெளரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தவிசாளரின் அழைப்பின்பேரில், அமைச்சின் செயலாளர் திடீர் விஜயம்!!!
Reviewed by Editor
on
March 01, 2021
Rating:
Reviewed by Editor
on
March 01, 2021
Rating:


