
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்ஹாஜ்.வை.எம்.ஹனீபா சேர் அவர்கள் காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) எனும் செய்தி மிகவும் கவலையான ஒன்றாக என்னை வந்தடைந்தது என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
கமு/ ஸாஹிரா தேசிய பாடசாலையின் பிரதி அதிபராக இருந்து கல்வியில் பலபக்க முன்னேற்றங்களை உருவாக்கிய வை.எம்.ஹனீபா சேர் அவர்கள் எமது பிராந்தியத்தின் சிரேஷ்ட அரசியல்வாதி முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் இணைப்பாளராக இருந்து கல்முனை, சாய்ந்தமருது உட்பட எமது பிராந்தியத்தின் சகல ஊர்களினதும் அபிவிருத்திப்பணிகளுக்கு உறுதுணையாக இருந்து செயலாற்றியுள்ளார்.
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் பிரதம நம்பிக்கையாளராக இருந்து பிரதேசத்தின் பொதுவிடயங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அன்னாரின் இழப்பு முழு சாய்ந்தமருத்துக்கும் பெரிய இழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், எல்லோருக்கும் இறைவன் மனநிம்மதியை வழங்கிட பிராத்திப்பதுடன் அன்னார் செய்த பொதுத்தொண்டுகள் சகலதையும் ஏற்று அறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களையும் மன்னித்து இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க பிராத்திக்கிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
March 29, 2021
Rating: