வீட்டு வேலைத் தொழிலாளர் சங்க மகளிர் தின விழா!!!

உழைக்கும் வர்க்க பெண்கள் தினமான இன்று (08) திங்கட்கிழமை வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் வீட்டு வேலை தொழிலாளாலர்களுக்கான சட்ட உரிமை பாதுகாப்பை கோரி உரிமை போராட்டம் மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டது.

வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தொழில் சட்டத்திற்க்குள் உள்வாங்கப்பட வேண்டும் கொரோனாத் தொற்றின் காரணமாக வேலை இழந்த தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற தொழில் வழங்குனர்களுக்கு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், வீட்டு வேலை தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க தனியான சம்பள நிர்ணய சபை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மகளிர் தின போராட்டமாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

வீட்டு வேலை தொழிலாளர் சங்க உறுப்பினர்களினால் இன்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது தமது கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுர நூல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீட்டு வேலைத் தொழிலாளர் சங்க மகளிர் தின விழா!!! வீட்டு வேலைத் தொழிலாளர் சங்க மகளிர் தின விழா!!! Reviewed by Editor on March 08, 2021 Rating: 5