அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள வகுப்புகள் ஆரம்பம்



(சர்ஜுன் லாபீர்)

அரச கரும மொழியினை பூர்த்தி செய்யாத உத்தியோகத்தர்களுக்கு அத்தேவைப்பாட்டினை நிறைவு செய்யும் பொருட்டு 150 மணித்தியாலங்கள் கொண்ட வதிவிடமற்ற சிங்கள வகுப்புகள் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (6) சனிக்கிழமை கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.


இந் நிகழ்வுக்கு வளவாளராக தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மொழிவளவாளர் பி.சந்திரகுமாரி,மற்றும் சிறீஸ் காந்தராஜா,மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான் ஆகியோர் கலந்து கொண்டு சிங்கள் வகுப்புகளை நடத்தினர்.





அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள வகுப்புகள் ஆரம்பம் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள வகுப்புகள் ஆரம்பம் Reviewed by Editor on March 06, 2021 Rating: 5