கருத்தரிப்பதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்களுக்கு COVID தடுப்பூசி தடையாகுமா?



இலங்கையில் தற்போது வழங்கப்படும் AstraZeneca தடுப்பூசி கருத்தரிப்பதற்கு   எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கு வழங்கப்படக் கூடாது எனும் தவறான தகவல் சமூக மட்டத்தில் பரவி வருகிறது. பெப்ரவரி 10 ம் திகதி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின் அடிப்படையிலான அறிவித்தலின்படி , தடுப்பூசி வழங்கல் காரணமாக குழந்தையைப் பெற எதிர்பார்க்கும் பெண்கள் அதை ஒத்திவைக்க வேண்டிய எதுவித அவசியமில்லையென இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தரவுகளின்படி, கர்ப்பிணித்தாய் சம வயதுள்ள கர்ப்பிணி அல்லாத பெண்களை விட  COVID அதிக சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆதாரங்கள் முன் வைக்கப்படுகிறது. அவ்வாறே COVID நோயினால் பீடிக்கப்பட்டால் முதிராக் குழந்தைகளின் பிறப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதும் காணக் கிடைத்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், கர்ப்பத்தை எதிர்பார்க்கும் பெண்கள் இதுபோன்ற தவறான எண்ணங்களிற்கு ஆளாகி தடுப்பூசி போடுவதைத் தவிர்த்தால், தாய்மார்களின் வாழ்க்கையிலும், பிறக்கவுள்ள  குழந்தையிலும் COVID-19 நோயால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைப்பதற்கான கிடைக்கக்கூடிய அரிய வாய்ப்பு அனியாயமாக  நழுவி விடும்.

இத்தகைய துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை அனுமதிக்காமல் விஞ்ஞானரீதியாக சரியான உண்மைகளை சமூக மயமாக்குவதில் நீங்கள் வழங்கும் உறுதியான ஆதரவை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம் என்று பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்தரிப்பதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்களுக்கு COVID தடுப்பூசி தடையாகுமா? கருத்தரிப்பதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்களுக்கு COVID தடுப்பூசி தடையாகுமா? Reviewed by Editor on March 03, 2021 Rating: 5