(றிஸ்வான் சாலிஹூ)
இன்று (16) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் முதல் முறையாக ( கிழக்கிலும்) கமரா மூலம் கருபைக் கழுத்து கட்டப்படும் சத்திர சிகிச்சையை பெண்நோயியல் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.சீ.எம்.முஸ்தாக் அவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளார்கள் என்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த சத்திர சிகிச்சை தொடர்பில் தெரியவருவதாவது,
இரண்டாம் கட்ட கால (12-28வாரங்கள்) கர்ப்பிணித் தாய்மார்களின் கருப்பைக் கழுத்து சுயமாக விரிவதனால் கரு கலைந்து எத்தனையோ தாய்மார்களின் கனவுகளும் கரைந்து விடுகின்றன.
இவ்வாறு கரு கலையும் போது கருப்பை கழுத்தை யோனியூடாக கட்டி குழந்தையைப் பாதுகாப்பாக பிறக்க வைப்பதற்கு செய்யும் சத்திர சிகிச்சையை Cervical cerclage என அழைப்பர். Cervical cerclage செய்தும் கரு கலைந்தால் வயிற்றினூடாக கருப்பைக் கழுத்தானது Mersilene tape மூலம் கட்டப்பட்டு கருப்பை விரிவு தடுகப்பட்டு பிள்ளைப் பேறு பாதுகாப்பாக இடம் பெறுகின்து. இதை Laparascopy மூலம் செய்யும் போது, இது Laparascopic abdominal cerclage என்றழைக்கப்படும்.
இவ்வாறான சந்திரசிகிச்சையை தாய்மார்களின் நலன் கருதி சிறந்த சேவையாக செய்து வரும் விசேட பெண்நோயியல் விசேட வைத்திய நிபுணர் அவர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகம் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
March 16, 2021
Rating:
