
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று சுகாதார புதிய வைத்திய அதிகாரியாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த டாக்டர் எப்.எம்.ஏ.காதர் இன்று (27) செவ்வாய்க்கிழமை காலை தனது கடமையினை அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் காதர் கருத்து தெரிவிக்கையில்,
மீண்டும் ஒரு கொவிட் அலையினை சந்திக்கும் ஐயப்பாட்டிலுள்ள இக்கால கட்டத்தில் பொது மக்களாகிய அனைவரும், சமூக இடைவெளி பேணுதல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளினை கழுவுதல், தேவையற்ற பயணங்களினை தவிர்ந்து கொள்ளல் போன்ற சுகாதார நடவடிக்கைகளினை பேணுவதன் மூலம் எமக்கு ஒத்துழைப்பு வாங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என்று அவர் தெரிவித்தார்.
அத்தோடு, இதுவரை எனக்குப் பரிபூரண ஒத்துழைப்பு வழங்கி ஆக்கபூர்வமான செயற்திட்டங்களினை நடத்த உதவிய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அனைத்து உத்தியோகத்தர்களிற்கும் ஏனைய நிறுவன உத்தியோகத்தர்களிற்கும் தனது நன்றிகளை அக்கரைப்பற்று புதிய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் காதர் தெரிவித்து கொண்டார்.
டாக்டர் காதர், அக்கரைப்பற்று மேலதிக சுகாதார வைத்திய அதிகாரியாகவும், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியாகவும் இதற்கு முன்னர் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
April 27, 2021
Rating: