கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை இதுவரை நூற்றைக் கடந்துவிட்ட நிலையில், தற்போது பிரான்ஸில் மீண்டும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்று அந்நாட்டு செய்தி தளங்கள் தெரிவித்துள்ளது.
பல்வேறு நோய்களுக்கு உள்ளான பலர் கொரோனாவுக்குள் அகப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்ட துயரமான சம்பவங்களாக உள்ளன. குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள மருத்துவக் கட்டில்களுக்கான பற்றாக்குறை என்பது நாடாளாவியரீதியில் நெருக்கடியாக உள்ளது.
தலைமை மருத்துவரின் அதிகாரத்துக்கு அமைய அவரது தேர்வுமுறையிலேயே நோயாளர்கள் தீவிரசிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். 'தேர்வு' முறையில் அனுமதிகப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என அரசாங்க பேச்சாளர் முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாளாந்த உயிரிழப்புகள் 300க்கு குறையாமல் காணப்படுவதோடு, வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதும் அதிகரித்துச் செல்கின்றது.
பாதிப்பான நோய்களை கொண்டிருப்பவர்கள் குடும்ப மருத்துவரின் அறிவுறுத்தலுக்கு அமைய எந்த வயதானவர்களும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையில் இவ்விடத்தில் கவனம் செலுத்துவது உயிரைப் பாதுகாக்கும்.
