(றிஸ்வான் சாலிஹூ)
இன்று (05) திங்கட்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற "National Vocational Training Excellence Award 2020" ஆண்டிற்கான விருதினை அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி தனதாக்கிக் கொண்டது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல தொழில் நுட்பக் கல்லூரிகளிலும் முதலாவது இடத்தினையும், ஏனைய பயிற்சி நிறுவனங்களுள் இரண்டாம் இடத்தினையும் இந்த தொழில்நுட்பக் கல்லூரி பெற்றமைக்காகவே இவ்தேசிய விருது வழங்கப்பட்டது என்று கல்லூரியின் அதிபர் திரு.எம்.சோமசூரியம் தெரிவித்துள்ளார்.
இக்கல்லூரியின் கல்வி, கல்வி சாரா, பெளதீக மேம்பாட்டின் அடைவுகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை பாராட்டக்கூடிய விடயமாகும்.
இவ்விருது கிடைப்பதற்கு முக்கிய பங்காற்றிய அதிபர் எம். சோமசூரியம் தலைமையில், பெளதீக மற்றும் வெளிக்கள செயற்பாடுகளை நிறைவேற்றிய பதிவாளர் ஐ.பியாஸ், கல்விசார் செயற்பாடுகளின் அடைவு மட்டத்தை அதிகரிக்க உழைத்த கல்விசார் அணியினர், மாணவர் ஆட்சேர்ப்பு, பயிற்ச்சி, தொழில் சார் நிறுவனங்களுடனான இணைப்பு வேலைகளை மேற்கொண்ட கல்லூரியின் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் பிஸ்ரின் அவர்களின் கீழுள்ள வழிகாட்டல் ஆலோசனை நிலையம், ஏனைய செயற்பாடுகளை செய்த கல்லூரியின் சகல உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், இந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் தனவந்தர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களாவார்கள்.
அத்தோடு இக்கல்லூரி இந்த கரையோர பிரதேசத்தில் அமையைப்பெற்று பல்லாயிரக்கணக்கான இளைஞர் சமூகம் தங்களின் எதிர்கால கணவை சிறப்பாக்க வழிகோலமைத்த தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களுக்கு கல்விச் சமூகம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
