இலங்கையில் மேலும் 1,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 2,530 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 131,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,030 பேர் நேற்று (11ம் திகதி) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 106,641 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 850 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.
Reviewed by Sifnas Hamy
on
May 12, 2021
Rating:
