சீன அரசால் மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள் வழங்கி வைப்பு!!!

சீனா அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசி தொகை இன்று (26) புதன்கிழமை அதிகாலை  வந்தடைந்துள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் குறித்த தடுப்பூசி தொகை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 6 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த தடுப்பூசி தொகுதிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், விமான நிலைய உயரதிகாரிகள், சுகாதார துறை அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.




சீன அரசால் மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள் வழங்கி வைப்பு!!! சீன அரசால் மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள் வழங்கி வைப்பு!!! Reviewed by Editor on May 26, 2021 Rating: 5