இராஜாங்க அமைச்சரை தோட்ட உரிமையாளர்கள் சந்தித்தார்கள்!!!

 (றிஸ்வான் சாலிஹூ)

நுவரெலியாவிலுள்ள மரக்கறி தோட்ட உரிமையாளர்களுக்கும், இரசாயன பசளை (உரம்) விற்பனையாளர்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (10) இடம்பெற்றது. 

இதன்போது அண்மையில் இரசாயன பசளை இடைநிறுத்தப்பட்டதையடுத்து மரக்கறி தோட்ட உரிமையாளர்களும் இரசாயன பசளை விற்பனையாளர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறித்த விடயம் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, 

இவ்விடயம் தொடர்பாக துறைசார் அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன, இ.தொ.கா வின் தேசிய அமைப்பாளர் இராஜதுரை, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் யோகராஜ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

 




இராஜாங்க அமைச்சரை தோட்ட உரிமையாளர்கள் சந்தித்தார்கள்!!! இராஜாங்க அமைச்சரை தோட்ட உரிமையாளர்கள் சந்தித்தார்கள்!!! Reviewed by Editor on May 10, 2021 Rating: 5