நாளை முதல் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

 கொவிட் பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக கடந்த வியாழன் (13) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு நாளை (17) திங்கட்கிழமை அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.

நாளை அதிகாலையுடன் போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட போதிலும் நாளாந்தம் இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படுவதுடன் மாகாணங்களுக்கு இடையில் தொடர்ந்து போக்குவரத்து கட்டுப்பாடு நீடிக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட போதிலும் கடமைக்கு செல்வதை தவிர வேறு நோக்கங்களுக்காக அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலேயே வீட்டை விட்டு வெளியேற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.



நாளை முதல் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாளை முதல் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் Reviewed by Editor on May 16, 2021 Rating: 5