அல்ஜசீரா ஊடக சேவையின் அலுவலகம் தரைமட்டம்!!

பலஸ்தீனத்திலுள்ள காசாவில் அமைந்துள்ள பிரதான ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் கலையகங்ஙள் அமைந்துள்ள கட்டிடம் இஸ்ரேலிய வான் படையால் இன்று (15) சனிக்கிழமை தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேர எச்சரிக்கை வழங்கிய பின் இஸ்ரேலிய விமானங்கள் இந்த கட்டிடத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் எத்தனை பேர் சிக்குண்டார்கள் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

அல்ஜசீரா அசோசியேட்டட் பிரஸ் பீரோ போன்ற பிரதான சர்வதேச ஊடகங்கள் அமைந்துள்ள கட்டிடம் இப்பொழுது தரைமட்டமாகி அந்த இடம் தூசு மண்டலமாக காட்சி அளிக்கின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு இன்னும் பல அலுவலகங்கள் இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதியை தற்போதைக்கு நெருங்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அல்ஜசீரா ஊடக சேவையின் அலுவலகம் தரைமட்டம்!! அல்ஜசீரா ஊடக சேவையின் அலுவலகம் தரைமட்டம்!! Reviewed by Editor on May 15, 2021 Rating: 5