நாட்பட்ட தொற்றா நோயாளர்களே அதிகம் இறப்பவர்கள்...

 

கொவிட்-19 நோய் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளில் பெரும் சதவீதமானோர் நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணரும் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளருமான மருத்துவர் விந்தியா குமாரபெலி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டோர் குறித்து சுகாதார அமைச்சு விஷேட கவனம் செலுத்தி வருகிறது. தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளருக்கு மருத்துவ கிளினிக்குகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மொபைல் கிளினிக்குகள் மூலம் மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை வழங்க பொறிமுறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




நாட்பட்ட தொற்றா நோயாளர்களே அதிகம் இறப்பவர்கள்... நாட்பட்ட தொற்றா நோயாளர்களே அதிகம் இறப்பவர்கள்... Reviewed by Admin Ceylon East on May 25, 2021 Rating: 5