பல விளைவுகளை சந்தித்த போதிலும் ஜெருசலத்தை மீட்பதே எமது நோக்கம்

 இஸ்லாமிய போராட்ட இயக்கமான "ஹமாஸ்" இன் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா அளித்த பேட்டியில் " ஜெருசலத்தின் வாளான அல்குத்ஸை மீட்கும் போரில் இஸ்லாமிய போராட்ட இயக்கத்தின் வெற்றி என்பது மூலோபாய வெற்றி (Strategical Victory) என்பதை ஹனியா உறுதிப்படுத்தினார். ஏனெனில் ஜெருசலத்தின் வாளை மீட்கும் போருக்குப் பிந்தைய நிலை என்பது அதற்கு முன்பு இருந்ததைப் போல அல்ல. இந்த யுத்தம் சூழல்களை மாற்றியமைத்து , புதிய வெற்றிகளுக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. இது பல வெற்றிகளையும் ஏராளமான முன்னேற்றங்களையும், ஒவ்வொரு மட்டத்திலும் நிறைய மூலோபாயத்தை உருவாக்குவதிலும் பயனளித்துள்ளது.

ஜெருசலத்தின் வாளை மீட்கும் போரில் ஃபலஸ்தீனிய மக்களின் இடைவிடாத எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றியைக் கொண்டாடும் உரையில், "ஆக்கிரமிப்புடனான போராட்டத்தின் மையமாக" ஜெருசலேம் இருப்பதாக ஹனியா வலியுறுத்தினார்.
* கூட்டு வெற்றி *
வீரம் மிக்க சமரசமில்லாத எதிர்ப்பால் பதிவுசெய்யப்பட்ட இந்த மகத்தான வெற்றியை நமது பாலஸ்தீனிய மக்களுக்கும் நமது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும் சமர்ப்பிப்பதாக ஹனியா கூறினார். இறை அருளால் கிடைத்த மூலோபாய வெற்றி(Strategical Victory) சியோனிச எதிரியுடனான மோதலில் நம்மை ஒன்றினைத்திருக்கிறது.
இந்த வெற்றி நமது ஃபலஸ்தீன மக்களால் பெறப்பட்டது என்றும், இந்த தேசத்தின் மகன்கள் அதற்காக வீதியில் இறங்கியும் , சழன்றும் வந்தார்கள் என்றும், நம் மக்களின் இடைவிடாத எதிர்ப்பின் விளைவால் இறைவனின் கிருபையுடனும், நம் மக்கள் மீது இறைவன் காட்டிய கருணையுடனும், நம்மீது இந்த வெற்றி இறங்கியதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஜெருசலத்தையும் ஆசீர்வதிக்கப்பட்ட அல்-அக்ஸா மஸ்ஜிதை பாதுகாக்கவும், ஷேக் ஜர்ராஹ் , டமாஸ்கஸ் வாயில் மற்றும் நமது புனிதங்கள் மீது படிந்துள்ள பாவம் நிறைந்த கரங்களை அகற்றுவதற்கும் காஸா எப்படி எழுச்சியோடு செயல்பட்டது என்பதை ஹனியா விளக்கினார்.
இந்த ஆசீர்வதிக்கப்பட்ட போரில் சிந்தப்பட்ட தியாகிகளின் இரத்தத்திலிருந்தும், எதிர்ப்பு போராட்ட தலைவர்களிடமிருந்தும், நம் மக்களுக்கு எதிராக சியோனிச எதிரி செய்த படுகொலைகளுக்கு பகரமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது என்பதை ஹனியா சுட்டிக்காட்டினார்.
அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள், அல்-குத்ஸ் படைப்பிரிவுகள், அபு அலி முஸ்தபா படைப்பிரிவுகள், நாசர் படைப்பிரிவுகள் மற்றும் இதைப் போன்றே உள்ள பிற எதிர்ப்புக் குழுக்கள் தலைமையிலான தீவிர எதிர் தாக்குதல்களால் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்லாமிய எதிர்ப்பு படைகள் ஒன்றிணைந்து நின்று நிகழ்த்திய கூட்டு முயற்சியின்
விளைவு மற்றும் கடுமையான வலிமிகுந்த தாக்குதல்களால் எதிரிகளை தாக்கி விதம் ஆகிவற்றினால் இந்த நிலம் , அதன் சமூகம், அதன் பாதுகாப்பு மற்றும் இராணுவ நிறுவனங்கள் மற்றும் எதிர்காலத்தில் நம் கைவசமாகக்ககூடிய இந்த புனித நிலத்திலிருந்து அவர்களை விரட்டப்பட்டதை ஹனியா சுட்டிக்காட்டினார்ர.
பெருமை வாய்ந்த காசாவில் எதிர்ப்பு போராட்டத்தையும் அதன் வழிநடத்திய தலைமைக்கும் ஹனியா மரியாதை செலுத்தினார். அதில் முன்னணியில் நின்ற அன்பான சகோதரர் யஹ்யா சின்வார், துறை ரீதியாகவும் களத்திலும் தலைவர்களையும் சகோதரர்களையும் வழிநடத்திய மகத்தான மனிதர் ஆவார்.
ஜெருசல மக்கள் ஆரவாரத்தோடு ஒரு பெயரை உச்சரித்து கூச்சலிட்ட கொரில்லா தாக்குதல் நிகழ்த்தும் படை வீரர் முகமது அல்-ஜைஃப் மற்றும் அல்-அக்ஸா மஸ்ஜிதுக்கு அருகிலும், முழு ஃபலஸ்தீனத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நிகழ்த்திய அணிவகுப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் எதிர்ப்பு போராட்டத்திற்கான உதவியை சர்வ வல்லமையுள்ள அல்லலாஹ்விடம் வேண்டினர் அவர்களுக்கும் ஹனியா தனது மரியாதையை தெரிவித்தார்.
எதிர்ப்பு போராட்டத்தின் தலைவரின் பெயரைக் கோடிக்கணக்கானோர் முழக்கம் எழுப்பினர், அவர் யார் என தெரியாது, அவரை இதுவரை மக்கள் சந்திக்கவில்லை, அவரது முகத்தைக் கூட அறியவில்லை, ஆனால் இரு உலகங்களிலும் இறைவன் தனது நினைவகத்தில் அவரை உயர்த்தியதால் அவருடைய பெயரை மக்கள் முழக்கமிட்டுள்ளனர்.
"இன்று நாம் இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கும், துணிச்சலான அதன் தலைமைக்கும் முன்னால் பெருமையுடனும் கண்ணியத்துடனும் நிற்கிறோம், அவர்களில் சிலர் மரணித்து விட்டனர் , அதில் தலைவரான பாசெம் இசா மற்றும் டாக்டர் ஜமால் அல்-ஜெப்தே" ஆகிய இருவர் என்று ஹனியா கூறினார்.
*தொடர்ந்து முன்னேற வேண்டும்*
போரின் ஆரம்பம் ஜெருசலேம், அல்-அக்ஸா மஸ்ஜித் மற்றும் ஷேக் ஜர்ராவைச் சுற்றிதான் இருந்தது. பாலஸ்தீன மக்களும் ஆசீர்வதிக்கப்பட்ட பூமியை பாதுகாக்க எதிர்ப்பு போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டார்கள், எந்த நேரத்திலும் , எப்பொழுதும் அந்த போரட்டம் நிற்காது என்றும், ஜெருசலேம் நோக்கி அதன் பயணத்தைத் தொடருவதாகவும் ஹனியா உறுதியளித்தார்.
இந்த போரில் சிந்தப்பட்ட இரத்தமும், எதிரியுடனான முந்தைய மோதல்களில் சிந்தப்பட்ட இரத்தங்களும் ஜெருசலமுக்கு செல்லும் பாதையிலும், பாலஸ்தீனம் முழுவதிலும் உள்ள பாதையிலும் உள்ளன என்பதை அவர் வலியுறுத்தினார்.
" நெருப்புடன் விளையாடாதீர்கள் என்றும் ஆசீர்வதிக்கப்பட்ட மஸ்ஜிதிலிருந்து உங்கள் பாவம் நிறைந்த கரங்களை எடுத்து விடுங்கள் என்றும் தீர்க்கமாக நாங்கள் சொன்னோம்., ஏனென்றால் இந்த ஜெருசலேம் எங்கள் தேசத்தின் தலைநகரம், எங்கள் நம்பிக்கை மற்றும் எமது எதிர்காலம், எமது அடுத்த நாகரிகத்தின் தலைநகரம், இறைவனின் விருப்பப்படி அது அப்படியே நடக்கட்டுமாக" என்று நாம் சொன்னதை எதிரிகள் உணர்ந்திருப்பார்கள்.
காஸா ஜெருசலத்தின் வாளை மிகத் தகுதியுடன் சுமந்து சென்றதாகவும், இந்த தீர்க்கமான வீரப் போர்களில் நான்காவது முறையாக பங்கெடுத்துள்ளதாகவும் ஹனியா சுட்டிக்காட்டினார்.
"வலிமிகுந்த அடிகள்"
காசா ஜெருசலத்தின் வாளின் உறுதியுடனும் விருப்பத்துடனும் தாக்குதல் நடத்தியதை பற்றி ஹனியா குறிப்பிடும்பொழுது மறக்க முடியாத ஒரு பாடத்தை எதிரிகளுக்கு கற்பிக்க முடிந்தது என்றார்.
ஜெருசலம் ,மேற்குக் கரை மக்கள் மேலும் 48 நிலங்களுக்கும் எதிரிகளுக்கும் புவியியல் தூரம் இருந்தபோதிலும் இப்பொழுது அவர்களிடம் ஒரு கவசமும் வாளும் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
காஸா எதிரிகளை வலிமிகுந்த முறையில் தாக்கியது, அது அதன் எதிரிகளின் மூலைகளை அசைத்துப் பார்த்தது, அவர்களது கணக்கீடுகளைத் தவிடுபொடியாக்கியது மேலும் இந்த மாபெரும் வீர தீர செயல்கள் மூலம் அவர்களை ஆச்சரியப்படுத்தியது என்றும் ஹனியா வலியுறுத்தினார்.
எதிர்ப்பு போராட்டம் வலுவடைந்தது, அதற்கு அதன் வழி தெரியும், போராட்டத்தின் மீதான விருப்பமும் வெற்றியின் தவிர்க்க முடியாத தன்மை பற்றிய ஆழமான நம்பிக்கையும், புதியவற்றை சிந்திக்கும் மனதினையும் இந்த உலகம் சாட்சியாக நின்று பார்த்தது என்று ஹனியா கூறினார்.
எதிர்ப்பு போராட்டம் முக்கியமான தேசிய காரணங்களை உள்ளடக்கியது. ஒன்று ஃபலஸ்தீனை விடுவிப்பது மற்றொன்று ஆக்கிரமிப்பாளர்களின் சிறைகளிலிருந்து ஃபலஸ்தீன கைதிகளை விடுவிப்பது என்று ஹனியா வலியுறுத்தினார்..
இந்த போரை ஒரு சிறந்த முயற்சி மற்றும் பல திருப்புமுனைகளை கொண்டது என்று ஹனியா கருதினார், இது சம்பந்தமாக எதிரிகளின் தீர்மானிக்கும் சக்திகளும், மற்றும் ஃபலஸ்தீனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து பார்வையாளர்களால் அவை அலசி ஆராயப்பட்டு படிக்கப்படும் என்றார்.
"எங்கள் மக்களும், எங்கள் எதிர்ப்பும், எங்கள் அன்புக்குரியவர்களும், ஜெருசலமின் வாள் போருக்குப் பின்பான வாழ்க்கைக்கு நம்மைத் தயார்படுத்துவோம், மேலும்
இந்த வெற்றி என்பது பாலஸ்தீனத்தில் தேசிய அளவிலும் மற்றும் உலகின் சுதந்திரமான மக்களுக்கு
சர்வதேச அளவிலும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இந்த வெற்றி என்பது ஒன்றுபட்டு நின்றதனால் கிடைத்த வெற்றி. ஒருநாள் பாலஸ்தீனம் ராஸ் அல்-நகூரா முதல் உம் அல்-ராஷ்ராஷ் வரை ஒன்றினையும் என்று ஹனியா சுட்டிக்காட்டினார். இந்த மேற்குக் கரையைச் சார்ந்த தியாகிகளும், பாலஸ்தீனிய சமூகங்களும் இந்த வெற்றியைப் பெறுவதில் பங்கேற்கின்றன.
மூலோபாய முன்னுரிமை ( Strategic Priorities) :
அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான தேவை நமக்கு இருக்கிறது. இரண்டு வழிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று மூலோபாய பாதைகள்(Strategic Path) மற்றொன்று மூலோபாய முன்னுரிமைகள் (Strategic Priorities). இதில் முதலாவதாக நாம் தேர்ந்தெடுப்பது " எதிர்ப்பு போராட்டம்" . எதிர்ப்பு போராட்டமே விடுதலைக்கான சுருக்கமான வழி என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த யுத்தம் பேச்சுவார்த்தைகளின் மாயைகள், நூற்றாண்டு ஒப்பந்தம் , தோல்வியின் கலாச்சாரம் மற்றும் எல்லாவற்றையும் இயல்பாக்கும் திட்டங்கள் என அனைத்தையுமே கைவிட்டது.
இரண்டாவது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பாலஸ்தீனிய மக்களின் ஒற்றுமை, இந்த போராட்டத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது, இந்த ஒற்றுமை என்பது எதிர்ப்பு போராட்டத்திற்கானது என்பதை ஹனியா சுட்டிக்காட்டினார்.
விடுதலை அமைப்புகள், உள் நிறுவனங்கள் மற்றும் ஒரு கூட்டு தேசியத்திற்கான வேலைத்திட்டத்தை உருவாக்கும் மட்டத்திலும் உண்மையான ஒற்றுமையை கட்டியெழுப்ப எங்களுக்கு ஒரு பெரிய முயற்சி தேவைப்பட்டது. மேலும் நமது அரபு மற்றும் இஸ்லாமிய சூழலுடனான உறவை வலுப்படுத்துவது தேவை. இதன் விளைவாக ஜெருசலேம் மற்றும் பாலஸ்தீனத்தின் பின்னால் எங்கள் மக்கள் எவ்வாறு ஒன்றுபட்டு நின்றார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டோம்.
சர்வதேச சமூகத்துடனான உறவை வலுப்படுத்துவதும் நமது தேவைகளில் ஒன்று. இதன் மூலம் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய சமூகங்களிலும், அமெரிக்காவின் இதயத்திலும் கூட மிகப் பெரிய மாற்றத்தை இம்முறை நாம் கண்டிருக்கிறோம் என்று ஹனியா சுட்டிக் காட்டினார்.
மேலும், "மேற்கு உலகின் தலைநகரங்களில் ஆக்கிரமிப்புக்கு எதிராக முற்றுப்புள்ளி வைக்க கோரி எங்கள் மக்களின் கோரிக்கைகளை ஆதரிக்கும் ஆர்ப்பாட்டங்களை நாங்கள் இம்முறை கண்டோம்" என்று ஹனியே மேலும் கூறினார்.
திறன்களை சீரமைத்தல் :
உலகில் உள்ள அனைத்து நல்ல மனிதர்களுடனும் நமது இயக்கத்தின் தலைமையில் ஒற்றுமையோடு இருக்கிறோம் என்று ஹனியா கூறினார்.
மேலும் 15 ஆண்டுகள் நீடித்த காசா மீதான முற்றுகையை நீக்க வேண்டியதன் அவசியத்தை ஹனியா வலியுறுத்தினார்.
எங்கள் மக்கள் மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொடர் முயற்சிகளை ஒவ்வொரு நாளும் முன்னெடுத்து தனது வரலாற்று பங்களிப்பை உறுதிப்படுத்திய எகிப்து அரபு குடியரசை ஹனியா பாராட்டினார்.
அரசியல் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தனது பங்கைக் செலுத்திய கத்தார் அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், கத்தாரின் வெளியுறவு அமைச்சகமும் அதன் தலைவரும் தினசரி எங்களோடு தொடர்பில் இருந்தனர்" என்றார். மேலும் ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களை தடுக்கும் பொருட்டு எகிப்து மற்றும் கத்தார் அரசுகளை ஒருங்கிணைத்த ஐக்கிய நாடுகள் சபைக்கு ஹனியா நன்றி தெரிவித்தார்.
எதிர்ப்பு போராட்டத்திற்கு யாரெல்லாம் பொருளாதாரமும், ஆயுதங்களும் தந்தார்களோ அவர்களுக்கு நன்றி. மேலும் பணம், ஆயுதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை வழங்குவதற்கு தயக்கம் காட்டாத ஈரானிய இஸ்லாமிய குடியரசிற்கும் நாங்கள் நன்றியை தெரிவிக்கிறோம் என்று கூறினார்.
ஹமாஸின் அரசியல் மேல்மட்டக்குழு அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் போரில் ஒவ்வொரு நபர்களும் மதிப்பு மிக்கவர்களே, அது ஃபலஸ்தீன தேசத்தின் மக்களாக இருந்தாலும் மற்றும் உலகின் அனைத்து சுதந்திரமான மக்களாக இருந்தாலும் சரியே.
-இஸ்மாயில் ஹனியா அரசியல் பிரிவு தலைவர் - ஹமாஸ் 21-மே-2021
:அஹ்மது யஹ்யா அய்யாஷ்

பல விளைவுகளை சந்தித்த போதிலும் ஜெருசலத்தை மீட்பதே எமது நோக்கம் பல விளைவுகளை சந்தித்த போதிலும் ஜெருசலத்தை மீட்பதே எமது நோக்கம் Reviewed by Sifnas Hamy on May 23, 2021 Rating: 5