அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம மொரகந்த பிரதேசத்தில் புத்தளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனம் ஒன்று மேலும் சில வாகனங்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதி வேகத்தில் பயணித்துள்ள கொள்கலன் வாகனம் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் மற்றும் மிதிவண்டி ஒன்றுடனும் மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதோடு, அவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வாகன கோர விபத்தில் ஒருவர் பலி, நான்கு பேர் படுகாயம்!!!
Reviewed by Editor
on
May 09, 2021
Rating:
Reviewed by Editor
on
May 09, 2021
Rating:

