வெசாக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை!

வெசாக் பண்டிகையினை முன்னிட்டு வெளிப்புற நிகழ்வுகள் மூலம் கொண்டாட எந்த அனுமதியும் வழங்கப்படாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் வெசாக் பண்டிகையினை கொண்டாடலாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் இராணுவத் தளபதி வலியுறுத்தினார்.

இதேவேளை, நாடு முழுவதும் கோவிட் தொற்று வேகமாக பரவத்தொடங்கியதை அடுத்து எதிர்வரும் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

வெசாக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை! வெசாக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை! Reviewed by Sifnas Hamy on May 15, 2021 Rating: 5