விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்...

(றிஸ்வான் சாலிஹு)

இலங்கைக்கு வரும் பயணிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த விமான பயணத் தடையை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது என்று அதிகார சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டுக்கு வரும் விமானங்களில் ஒரே நேரத்தில் 75 பயணிகள் மாத்திரமே வர முடியும். அவ்வாறு வருபவர்கள் 14 நாட்களுக்குள் இந்தியாவுக்கு சென்றவர்களாக இருக்கக் கூடாது.

அதேபோல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தொடர்ந்தும் இந்த பயணத்தடை காணப்படுகின்றது. நாட்டுக்கு வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

இலங்கை வரும் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்... விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்... Reviewed by Admin Ceylon East on May 27, 2021 Rating: 5