(சர்ஜுன் லாபீர்)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 அசாதாரண சூழ் நிலைக்கு மத்தியில் இன்று நாடு பூராகவும் தளர்த்தப்பட்ட பயணக்கட்டுக்கு அமைவாக கல்முனை பிரதேசத்தில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.அந்த அடிப்படையில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையிலான குழுவினரால் இன்று (25) காலை கல்முனை சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வியாபாரிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
முறையான சுகாதார வழிகாட்டல்களுடன் உரிய அனுமதிகளோடும், கட்டுப்பாடுகளோடு ம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாத வியாபரிகளுக்கு அடுத்து வரும் பயணத்தடை தளக்கப்படும் நாட்களில் குறித்த வியாபாரிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் பிரதேச செயலாளரினால் வியாபாரிகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.
இக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ் ரியாஸ்,கணனி உத்தியோகத்தர் எஸ்.எம் ஜிஹான், ஆகியோர் கலந்து கொண்டனர்.
வியாபார நடவடிக்கைகளை பிரதேச செயலாளரினால் திடீர் கண்காணிப்பு
Reviewed by Editor
on
May 25, 2021
Rating:
