முஹம்மட் பாரீஸ் சமாதான நீதவனாக சத்தியப்பிரமாணம்...

(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹம்மது அனிபா முஹம்மட் பாரீஸ் முழு தீவுக்குமான சமாதான நீதவனாக கடந்த (31) திங்கட்கிழமை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற மாவட்ட நீதிபதி கெளரவ எம்.எச்.முஹம்மட் ஹம்சா அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கட்டிடக்கலை பொறியியலாளரான இவர், காதிரிய்யா தெற்கு வட்டார கிராமிய சபை தவிசாளராகவும், உமர் பின் கத்தாப் பள்ளிவாசல் மற்றும் சேர் ராசீக் பரீட் சன சமூக நிலையத்தின் செயலாளராகவும், காதிரிய்யா இளைஞர் கழக ஆலோசகராகவும் கடமை புரிவதுடன், 19 வருடத்திற்கும் மேற்பட்ட காலம் சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





முஹம்மட் பாரீஸ் சமாதான நீதவனாக சத்தியப்பிரமாணம்... முஹம்மட் பாரீஸ் சமாதான நீதவனாக சத்தியப்பிரமாணம்... Reviewed by Editor on June 04, 2021 Rating: 5