கொரோனா' சடலத்தை கொண்டு சென்ற வாகனம் விபத்து, ஒருவர் பலி!!!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை ஹட்டனிலிருந்து ஓட்டமாவடிக்கு கொண்டுச்சென்ற வாகனத்துக்கு பாதுகாப்பை வழங்கிய வேன் விபத்துக்குள்ளானதில் உப பொலிஸ் அதிகாரியொருவர் பலியாகியுள்ளார். அத்துடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே பலியாகியுள்ளார்.  காயமடைந்தவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேனில் பயணித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும், சாரதியும், உயிரிழந்தவரின் இரு உறவினர்களுமே காயமடைந்துள்ளனர்.

ஹட்டன் – கினிகத்தேன வீதியில் –  வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில்  வைத்தே இன்று காலை 7 30 மணியளவில் வீதியை விட்டு சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.






கொரோனா' சடலத்தை கொண்டு சென்ற வாகனம் விபத்து, ஒருவர் பலி!!! கொரோனா' சடலத்தை கொண்டு சென்ற வாகனம் விபத்து, ஒருவர் பலி!!! Reviewed by Editor on June 05, 2021 Rating: 5